நேற்று (நவம்பர் 6) சென்னையில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே அரங்கம் நிறைந்திருந்ததால் டிக்கெட் இருந்தும் பல ரசிகர்களைப் போலீசார் நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
தனுஷ் பதிவு
இதனால், இந்தச் சம்பவம் குறித்து தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
“ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு”.
தனுஷ் தற்போது அரசியல் என்ட்ரிக்குத் தயாராகி வருகிறார். நேற்று ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சில் அரசியல் கலந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.