சூர்யா நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

இப்படத்தின் புரோமோஷனுக்காக, படக்குழுவினர் ஹைதராபாத், கேரளா எனச் சுற்றி வந்தார்கள். நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று சென்னையில் ஃபீனிக்ஸ் மாலிலும் ஒரு நிகழ்வை நடத்தியிருந்தார்கள்.
தற்போது, படம் வெளியாவதற்கு சில சிக்கல்கள் எழுந்திருப்பதால், திரைப்படம் நாளை என்கிற வெளியாகுமா என்கிற கேள்வியோடு ரசிகர்கள் பலர் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு ஆர்.ஜே. பாலாஜி பதிலை தந்திருக்கிறார்.
இது தொடர்பாக பதிவிட்டிருக்கும் ஆர்.ஜே. பாலாஜி, “எனது அன்பிற்குரிய ரசிகர்களே, தற்போதைய சூழல் குறித்து என்னிடம் உறுதியான பதில் ஏதுமில்லை.
பிரச்னைகளைத் தீர்க்கத் தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பல தடைகள் வந்திருக்கின்றன.
Dearest fans, I dont have a concrete answer to the current situation. Producers are doing their best to solve the hurdles. This film has always had hurdles, and somehow God has made us sail through all that and here we are after 32 months. This time as well, I have faith,…
— RJ Balaji (@RJ_Balaji) May 13, 2026
ஆனால் ஏதோ ஒரு வகையில் கடவுள் அந்தத் தடைகளையெல்லாம் கடக்க வைத்து, 32 மாதங்களுக்குப் பிறகு இன்று நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். #Karuppu நாளைக்கு காலைல செமயா release ஆகும்..!!! நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!” என்றிருக்கிறார்