ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
படத்தின் வெற்றிக்கு பிறகு ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி சூர்யா குறித்து பேசியிருக்கிறார்.
‘கங்குவா’ படத்துக்காக சூர்யா சார் மூன்று ஆண்டுகள் செலவிட்டார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு பத்து நாட்களிலேயே அவர் என்னுடைய செட்டுக்கு வந்துவிட்டார்.
அவரது எனர்ஜி அப்படியேத்தான் இருந்தது. கருப்பு படத்துக்காக நாங்கள் சூர்யாவுடன் 51 நாட்கள் மட்டுமே ஷூட் செய்தோம். குறைந்த நாட்களில் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அது நிறைவேறியிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.