கரும்புள்ளி…முக அழகைக் கெடுக்கும் மங்கு பிரச்னை: இந்த 6 விஷயங்களில் அலெர்ட்! | Blackhead / Dark Spot… Facial Beauty-Spoiling Melasma Problem: Stay Alert to These 6 Things!

Spread the love

மங்கு பிரச்னைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் இல்லை. ஆனாலும், வெளிப்புறத் தோற்றத்தை ஓரளவு மேம்படுத்தும் புற சிகிச்சைகள் இருக்கின்றன. சரும நிறத்தை மாற்றக்கூடிய கிரீம்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மங்கின் தீவிரம் மிக அதிகமாக உள்ள இடங்களில் தடவ ஸ்டீராய்டு ஆயின்மென்ட்டுகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார்.

மருத்துவரின் பரிந்துரையின்றி, தவறான முறையில் தவறான அளவுகளில் ஹைட்ரோகுவினான் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினால், exogenous ochronosis  என்கிற பிரச்னை வரலாம். இதிலுள்ள பிளீச்சிங் பொருளின் காரணமாக சருமம் மேலும் கறுத்துப் போகும். ஹைட்ரோகுவினானின் அளவு 4 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கிறபோது ஏற்படுகிற சருமக் கருமையானது நிரந்தரமாக நின்றுவிடும்.

கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், மங்கின் தீவிரத்தை மட்டுப்படுத்தும் கிரீம்களில் உலகளவில் ஹைட்ரோகுவினானின் பங்கு தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. மங்கின் கருமை மாறுவதற்கு பதில், சரும நிறத்தில் வேறு மாதிரியான வித்தியாசங்கள் தென்பட ஆரம்பித்தால் ஹைட்ரோகுவினான் கலந்த கிரீம் அல்லது ஆயின்மென்ட் உபயோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மங்கு பிரச்னையை முற்றிலும் குணப்படுத்துவதாகச் சொல்லப்படும் போலி விளம்பரங்களை, சிகிச்சைகளை நம்ப வேண்டாம்.

மங்கு பிரச்னையை முற்றிலும் குணப்படுத்துவதாகச் சொல்லப்படும் போலி விளம்பரங்களை, சிகிச்சைகளை நம்ப வேண்டாம்.
freepik

ஹைட்ரோகுவினான் உதவாதபோது, கெமிக்கல் பீல் சிகிச்சை, டெர்மாப்ரேஷன், மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சைகள் பலனளிக்கும். ஆனால் எந்தச் சிகிச்சையிலும் மங்கு முற்றிலும் மறைந்துவிடுவதில்லை. மீண்டும் வரும். 

மங்கு பிரச்னையை முற்றிலும் குணப்படுத்துவதாகச் சொல்லப்படும் போலி விளம்பரங்களை, சிகிச்சைகளை நம்ப வேண்டாம். மருத்துவரை அணுகி, முதலில் இது மங்குதானா என்பதை உறுதிசெய்துகொண்டு, முறைப்படி அவரின் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.

டாக்டர் தலத் சலீம்:

சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் செஹட் த ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் உரிமையாளர். 26 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் “செஹட்’ (Sehat) என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நிறுவி, கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு குறித்த சிகிச்சைகளை வழங்கி வருகிறார். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *