கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷின் செல்போனை பறிமுதல் செய்து! Forensic labக்கு அனுப்புகிறார்களா? | Kallakurichi MLA Arul Vignesh’s cellphone to be seized and sent for forensic lab

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தற்போது நீதிமன்ற கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. அதிமுக வழக்கறிஞர் திரிசூலி போட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

kallakurichi arul vignesh

அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தொடர்ந்த வழக்கில் காவல் துறை, “ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை” என தெரிவித்திருந்தது. அப்போது நீதிபதி, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால் அது துரதிருஷ்டவசமானது, எம்எல்ஏவின் மாண்பை குலைத்துவிடும் என தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தலைமைச் செயலாளர், தூய்மைப் பணியாளர், ஆட்சிய் என யாராக இருந்தாலும் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

நீதிபதி கேள்வி

பெண்களுக்கு எதிரான புகார் குறித்து மாநில அளவில் குழுக்கள் இல்லை, ஏன் அமைக்கவில்லை, வழக்கில் புலன் விசாரணை அதிகாரி யார் என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் நீதிபதி, “யாரையாவது காப்பாற்ற அரசு முயற்சிப்பது தெரிந்தால் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை” என்றார். அதற்கு காவல் துறை தரப்பில், “தமிழக அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை” என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்றைய தினம் மாவட்ட எஸ்பி ஷக்னாஸ் ஆட்சியர் அலுவலகம், வீட்டில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸிடம் விசாரணை நடத்தியிருந்தார்.

விசாரணை அதிகாரி

அது போல் கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ வீட்டிற்கும் விசாரணைக்கு போலீஸார் சென்றனர். ஆனால் அவரோ வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் போலீஸார் அங்கிருந்து கிளம்பினர். இந்த நிலையில் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எம்எல்ஏவுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

செல்போனை பறிமுதல் செய்ய திட்டம்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்ப பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனராம். மேலும் அந்த செல்போனை சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

யார் இந்த அருள் விக்னேஷ்?

கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் வசித்து வருபவர் அருள்விக்னேஷ் (36). 1990ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி பிறந்தார். அவரது பெற்றோர் சின்னையா- லட்சுமி ஆவார்கள். இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எம்எஸ்சி படித்துள்ள அருள், கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூரில் புல்வெளி கிரிக்கெட் மைதானம் அமைத்து கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வந்தார்.

எம்எல்ஏவானார்

கடந்த ஆண்டு அக்டோபரில் தவெகவில் இணைந்த அருள் விக்னேஷுக்கு கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலில்,கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியது. இவர் அதிமுக வேட்பாளர் ராஜீவ்காந்தியை விட 798 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *