காலே டெஸ்ட்: 372 ரன்கள் இலக்கு… 206-க்கே ஆல் அவுட்டான இலங்கை – அபார வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!

Spread the love

இரண்டாவது நாளில் இந்தியா இலங்கைக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ரிஷப் பண்ட், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தால் மைதானத்தை அதிர வைத்தார்.

இந்தப் போட்டியில் தனது சிக்ஸர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 193 ரன்கள் சேர்த்து, இலங்கைக்கு 372 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இலங்கை வெற்றியை நோக்கி நகர முயன்ற நேரத்தில், இந்தியாவின் சுழல் தனது வேலையைத் தொடங்கியது. மானவ் சுதார் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் நம்பிக்கையை சிதைத்தார்.

போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகள் என்ற அசத்தல் பந்துவீச்சுடன் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா, 4,000 டெஸ்ட் ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

மானவ் சுதார்

மானவ் சுதார்
Eranga Jayawardena

இந்தச் சாதனையை எட்டிய உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.

இறுதியில் 206 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் செய்து 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இது இந்தியா பங்கேற்ற 600வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் 1–0 என இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *