இந்தியாவில் எந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறதோ என்னவோ, கர்நாடகாவில் ஒரு விஷயத்தில் இருக்கும்.
அது தான் காவிரி குறுக்கே அணை கட்டுவது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக எது ஆட்சிக்கு வந்தாலும், அவர்களது முதல் பேச்சே, “காவிரி நடுவே அணை கட்டுவதாக தான் இருக்கும்’.
இப்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸிற்கும் இடையே காவிரி குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக பிரச்னை நிலவி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவின் பாஜக மாநில தலைவர் ரூட்டை மாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு சமாதான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா, “கர்நாடக மக்களிடமிருந்து மனமார்ந்த வாழ்த்துகள்!
கோவில்களின் பூமியாகவும், அளப்பரிய கலாச்சாரச் செழுமை கொண்ட நாகரிகத்தின் தொட்டிலாகவும் விளங்கும் தமிழகம், கர்நாடகாவோடு பல நூற்றாண்டுகளாகத் தழைத்தோங்கிய ஆழமான மற்றும் நீடித்த பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறது.
பகிரப்பட்ட வரலாறு, பண்பாடு, வர்த்தகம் மற்றும் அனைத்திற்கும் மேலாக நமது மக்களின் அன்பினால் பிணைக்கப்பட்ட இரு அண்டை மாநிலங்கள் நம்முடையவை.