'கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள்… விஜய் தேவரகொண்டா கோபப்பட்டு கத்திவிட்டார்; நான்.!" – ராஷ்மிகா

Spread the love

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய தேவரகொண்டா – நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் ‘ரணபலி’.

இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரலாற்று பின்னணியை கதைகளமாக கொண்டிருக்கிறது.

இப்படம் வரும் 16-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

ரணபலி
ரணபலி

அந்தவகையில் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் பேசிய ராஷ்மிகா ‘கீதா கோவிந்தம்’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

” ‘கீதா கோவிந்தம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது நான் ஒரு பாடலை சத்தமாக கேட்டதற்கு விஜய் என்னிடம் கோபப்பட்டு கத்திவிட்டார்.

இந்தத் துறை எனக்கு புதிது என்பதால் அந்த நிகழ்வு என்னை மோசமாக பாதித்து, நான் அழுதுவிட்டேன். ஆனால் நாட்கள் கடந்தபின் அவரை பற்றி புரிந்துக் கொண்டு, நண்பர்களாகி விட்டோம்.

அவருடன் நடிக்கும் போது எனக்கு எந்தப் பயமும் ஏற்படவில்லை. அவர் எப்போதும் சக நடிகர்களுக்கு முழு சுதந்திரமும், வசதியான சூழலையும் அமைத்துக் கொடுப்பார்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா

நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றிய படங்களின் படப்பிடிப்பில், ஒவ்வொரு காட்சியையும் எவ்வாறு சிறப்பானதாக மாற்றலாம் என்று எப்போதும் விவாதித்துக் கொண்டே இருப்போம்.

திரைக்கு அப்பாலும் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதலும், வலுவான நட்பும் உருவாக அதுவே முக்கியக் காரணமாக அமைந்தது” என்று பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *