சூழலினால் தவறு செய்யும் கணவர், அதனால் அவரைப் பிரியும் மனைவி, இவர்களைச் சேர்த்து வைக்கும் மகள், பிறகு குடும்பமாகச் சேர்ந்து கணவர் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு எப்படி நீதி பெறுகிறார்கள் என ‘பாரிஸ் கஃபே’வின் ஸ்டியரிங்கைத் திருப்பியிருக்கிறார் இயக்குநர்.
எப்போதும் அறத்தையே பின்பற்ற நினைக்கும் மனைவி, ஆனால், குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அந்த நேரத்தில் தவறு செய்யும் கணவர், இதனால் இவர்களுக்குள் உண்டாகும் மோதல் என்கிற விதத்தில் ஆரம்பக் கதை ‘லைக்’ செய்ய வைக்கிறது.
ஆனால், அக்கதையைத் துளியும் பரபரப்பும், சுவாரஸ்யமும் இல்லாமல் திரைக்கதையாக விரித்திருக்கிறார் இயக்குநர்.

இடையிடையே கைகொடுக்காத ஒன்லைனர்கள், நாடகத்தன்மையோடு அரங்கேற்றப்பட்ட காட்சிகள், செல்லுபடியாகாத எமோஷன் எனப் பல விஷயங்கள், சோர்வடைந்த படத்தை மேலும் தாலாட்டுகின்றன. ஆணவக்கொலை பற்றிப் பேச நினைத்த நோக்கத்திற்கு மட்டும் பாராட்டுகள்!
மேக்கிங், திரைக்கதை என இரண்டிலும் சோர்வூட்டும் இந்த ‘பாரிஸ் கஃபே’ நம் வீக்கெண்ட் டைம்பாஸாக மாறவில்லை.