குழந்தை ரசிகர்கள் அதிகம்னால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க! – ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ பரபர அப்டேட் . Raghava lawarence movie kanchana 4 shoot update EXCLUSIVE

Spread the love

ராகவா லாரன்ஸின் ஹிட் பாகங்களான “காஞ்சனா’ சீரீஸ், நாலாவது பாகத்துடன் நிறைவடைகிறது என்ற தகவல் பரவி வருகிறது. இப்போது அவர் இயக்கி வரும் `காஞ்சனா 4′ படம் ‘முனி’ பட வரிசையில் 5வது பாகமாகும். இதற்கிடையே ‘பென்ஸ்’ படத்திலும் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் ‘காஞ்சனா 4’ என்ற போஸ்டர் வெளியாகி இருந்தது, இது குறித்தும் படப்பிடிப்பு அப்டேட்கள் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

காஞ்சனா படப்பிடிப்பில்

காஞ்சனா படப்பிடிப்பில்

லாரன்ஸின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘முனி’. அதன் வெற்றிக்கு பின் பேய் கதையை கையில் எடுத்தார் ‘முனி 2’விற்கு ‘காஞ்சனா” என டைட்டில் வைத்தனர். இப்போது ‘காஞ்சனா 4’ ஆக உருவாகி வருகிறது.

இது குறித்து லாரன்ஸ் கூட, ”பேய் ட்ரெண்டை உருவாக்கணும்னு நான் எதுவும் பண்ணலை. எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம்னால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க. தவிர எங்க டீமோட சின்ஸியரான வொர்க் ஒரு ட்ரெண்டை உருவாக்கிருச்சு.” எனச் சொல்லும் லாரன்ஸின் ‘காஞ்சனா”வில் பூஜா ஹெக்டே ஹீரோயின். இன்னொரு ஹீரோயினாக நோரா பதேஹி நடிக்கிறார். மற்றும் கோவை சரளா, தேவதர்ஷினி,ஸ்ரீமன் ஆனந்த்ராஜ், கிங்ஸ்லி, சாய்தீனா, கருடா ராம் என பலரும் நடிக்கின்றனர்.

படத்திற்கு கிச்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் வெளியான பட போஸ்டர் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அது அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும் லாரன்ஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

நோரா பதேஹி

நோரா பதேஹி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *