“கோவை சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை” – ஐ.ஜி ரம்ய பாரதி அதிர்ச்சித் தகவல் | IG Ramya Bharathi confirms that Coimbatore girl was sexually assaulted and murdered

Spread the love

கோவை சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்ய பாரதி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “கடந்த 21-ம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 5 மணியளவில் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது.

காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, இரவு சுமார் 10 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காணாமல் போன சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையின் போது 250 சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (33) என்ற சிறுமியின் குடும்பத்திற்குப் பழக்கமான அண்டை வீட்டுக்காரர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இதனைத் தொடர்ந்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கியிருந்த குற்றவாளி கார்த்தியை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *