இது தொடர்பாக நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள், “கொறடாவாக இருந்து உறுப்பினர்களை முறையாக வழிநடத்தி அவையில் திமுகவின் நரேட்டிவ் எப்படி இருக்க வேண்டுமென தீர்மானிக்க வேண்டியவர் எ.வ.வேலு. ஆனால், அவரோ முக்கியமான தருணங்களிலெல்லாம் ஆளுங்கட்சியை வருடிக் கொடுத்து Same Side கோல் போட்டுக் கொண்டிருக்கிறார். லாட்டரி விவகாரத்தில் அவையில் உதயநிதிக்கும் ஆதவ்வுக்கும் காட்டமான விவாதம் நடந்தது. கடைசியில், ‘மார்ட்டினிடம் ஏன் 900 கோடி வாங்கினீர்கள் என்பது உங்கள் அப்பாவுக்குதான் தெரியும். அவர் அவையிலேயே இல்லை. வீட்டில் போய் அவரிடம் கேளுங்கள்’ என மூக்கறுக்கும் வகையில் ஆதவ் பேசினார்.

உதயநிதியால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. உடனே எ.வ.வேலு எழுந்தரித்தார். ஆதவ்வை கண்டித்து அம்புகளை ஏவப் போகிறார் எனப் பார்த்தால், ‘மார்டின் எங்களுடைய நீண்ட கால நண்பர். தேர்தல் நிதி வாங்குவது வழக்கம்தானே. அதை ஏன் பேச வேண்டும்’ என ‘நாங்க பாவம்ல…’ பாணியில் மழுங்கலாக பேசினார். இணையத்தில் அன்று முழுவதும் உதயநிதிக்கு ஆதவ் கொடுத்த பதிலடிதான் ட்ரெண்ட். திமுகவுக்கு மார்டின் தேர்தல் நிதி கொடுத்த போது ஆதவ்வும் திமுக முகாமில் திமுகவின் வெற்றிக்குதான் உழைத்துக் கொண்டிருந்தார் என்கிற பாய்ண்ட்டை கூட எ.வ.வேலு முன்வைக்கவில்லை.