“சில கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்”- கிரிஷ் சோடங்கர்| Girish chodankar says Beyond supporting TVK, we will share responsibility in governing activities.

Spread the love

இந்த அறிவிப்புக்கு பிறகு விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கொடுத்தனர். அவர்களுடன் பிரவீன் சக்கரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் சென்று தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தச் சந்திப்பிற்குப் பிறகு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர், “த.வெ.க தலைவர் விஜய்யைச் சந்தித்து எங்களது ஆதரவை தெரிவித்தோம்.

கிரிஷ் சோடங்கர்

கிரிஷ் சோடங்கர்

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் நாங்கள் அளித்துள்ளோம். மேலும் சில கட்சிகளும் த.வெ.க-வுக்கு ஆதரவளிக்க வேண்டும். த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். புதிதாக அமையும் த.வெ.க அரசாங்கத்தில் ஓர் அங்கமாக காங்கிரஸ் இருக்கும். நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதையும் தாண்டி, அரசின் செயல்பாடுகளில் நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *