‘சிவகாசியில் வாகை சூடும் கே.டி ராஜேந்திர பாலாஜி!’ – K.T. Rajendra Balaji Claims Glory in Sivakasi

Spread the love

பட்டாசுத் தொழிலில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் வெடி விபத்தைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் ஆளும்தரப்பு எடுக்கவில்லை. சிவகாசியைச் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. மறுமுனையில், சிவகாசியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, எக்கசெக்க நலத்திட்டங்களைக் கொண்டுவந்த ராஜேந்திர பாலாஜிக்கு தொகுதிக்குள் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

பட்டாசு தொழிலுக்கு இன்னல் வந்தபோது 20 எம்.பிக்களுடன் டெல்லி சென்று முறையீட்டு அந்தத் தொழிலாளர்களின் நலன்களைக் காத்தவர் என்பதை தொகுதி மக்கள் நினைவுக் கூறுகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி

ராஜேந்திர பாலாஜி – எடப்பாடி பழனிசாமி

சமூக ரீதியாக பார்த்தால், முக்குலத்தோர், பட்டியல் சமூகம், ஆசாரி சமூகம் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சமூகங்களில் ஆதரவுபெற்ற வேட்பாளராக இவர்தான் இருக்கிறார். அதேபோல் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன், குடிநீர் விநியோகத்தை உடனடியாகச் சீர்செய்வேன் போன்ற அவரது வாக்குறுதிகள் தொகுதிக்குள் எடுபட்டுவருகின்றன.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள்” என்றனர்.

சிவகாசி தொகுதி மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம். “பெண்களுக்கான பாதுகாப்பின்மை, கஞ்சா போதைப் புழக்கம், சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, தலைவிரித்தாடும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மீண்டும் தி.மு.க கூட்டணிக்கு நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை.

மண்ணின் மைந்தராக இருந்து தொகுதி நலன் குறித்து சட்டமன்றத்தில் குரல்கொடுக்கும் ராஜேந்திர பாலாஜிக்கே எங்கள் வாக்கு. மற்றவர்கள் டெபாசிட் தொகையே பறிபோகும்” என்றனர்.

சிவகாசியில் உறுதியாக மலர்கிறது ‘இரட்டை இலை!’

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *