சிவகாசி பட்டாசு தொழிலுக்கு தமிழக அரசு ஆதரவு – அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு|Sivakasi’s Diwali Boom! Firecracker Sales Hit Rs 7,000 Crore

Spread the love

இந்த ஆண்டு (2026) தீபாவளியையொட்டி ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், “சிவகாசியின் தளராத உழைப்பும் தன்னம்பிக்கையும் தமிழ்நாட்டின் பெருமை!

ஒவ்வொரு பட்டாசுக்குப் பின்னாலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் கடின உழைப்பும், திறமையும், எதிர்காலக் கனவுகளும் அடங்கியுள்ளன.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் செயல்படும் நமது அரசு, இந்தப் பாரம்பரியமிக்க தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சிவகாசியை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லவும் உறுதுணையாக இருக்கும்.

அடுத்த ஆண்டில் ரூ.10,000 கோடி விற்பனை என்ற மாபெரும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இத்தொழிலுக்கு, அந்த மைல்கல்லை எட்ட தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *