“தவெக ஆட்சியில் காவலர்களுக்கே SAFETY இல்லை..” உதயநிதி குற்றச்சாட்டு! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையன்று ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் – பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.

Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் – காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. 

கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.

ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் – இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?

தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *