சீனாவில் டிவின் டவர் சம்பவமா? பெய்ஜிங்கின் CITIC Tower மீது விமானம் மோதியது! பரபர வீடியோ | Beijing Skyscraper Hit by Small Plane; CITIC Tower Damaged in Shocking Incident Raising Security Concerns

Spread the love

International

oi-Prasanna Venkatesh

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற கட்டடமான CITIC Tower-இல் சற்றும் எதிராபாராத விதமாக ஒரு சிறிய ரக விமானம் மோதிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற நாடுகளை போல் அல்லாமல் சீனாவில் மிகவும் கடுமையான வான்வெளி பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தாண்டி இப்படியொரு விபத்து நிகழ்ந்திருப்பது, அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளது.

Beijing plane crash CITIC Tower China Zun building plane hit Beijing skyscraper accident CITIC Tower damage 2026 Beijing airspace security breach Small plane crashes into Beijing tower China plane incident CITIC Beijing Twin Tower comparison CITIC Tower glass damage Beijing aviation security concerns CITIC Tower CITIC Tower 2026 CITIC CITIC Tower

என்ன நடந்தது?

வெள்ளிக்கிழமை மாலை, திட்டமிட்ட விமானப் பாதையில் இருந்து வெளியேறிய ஒரு சிறிய ரக விமானம், பெய்ஜிங் மத்திய வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள 108 மாடிகள் கொண்ட CITIC Tower (China Zun) கட்டடத்தின் மேல் பகுதியில் மோதியது.

விமானம் மோதியதால் கட்டடத்தின் உயரமான தளங்களில் கண்ணாடி சுவர்கள் உடைந்து சேதமடைந்தன. மோதிய வேகத்தில் விமான இரண்டாக உடைந்தது, இதன் பின்பு விமானத்தின் பாகங்கள் கீழே சிதறி விழுந்ததுள்ளது. கீழே விழுந்த பாகங்கள் கார் மீது விழுந்து சேதம் அடைந்தது. மேலும் கட்டடத்தின் அடிப்பகுதியில் புகை எழுந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கட்டடம் சீனாவின் முக்கிய வர்த்தக அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் விமானம் மோதிய செய்தி சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் டிவின் டவர் விபத்து போலவே இருந்துள்ளதால், சீன மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அவசர மீட்புப் பணிகள்.. கடுமையான பாதுகாப்பு

விபத்துக்குப் பிறகு தீயணைப்பு வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தன. கட்டடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கட்டடத்தைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டதுடன், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதையும் போலீசார் தடுத்தனர். ஆயினும் பல வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன.

உயிரிழப்புகள் எத்தனை

இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பரவியுள்ள சில படங்கள் மற்றும் வீடியோக்களில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் கட்டட சேதம் காணப்பட்டாலும், கட்டடத்தின் பாதிப்பு பெரியதாக இல்லாத போலவே உள்ளது.

Beijing plane crash CITIC Tower China Zun building plane hit Beijing skyscraper accident CITIC Tower damage 2026 Beijing airspace security breach Small plane crashes into Beijing tower China plane incident CITIC Beijing Twin Tower comparison CITIC Tower glass damage Beijing aviation security concerns CITIC Tower CITIC Tower 2026 CITIC CITIC Tower

இந்த நிலையில், உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியாகும் வரை பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விமானம் எவ்வாறு தனது பாதையில் இருந்து விலகியது, இது தொழில்நுட்ப கோளாறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை முடிவுகள் வெளியாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *