சூப்பர் ஸ்டார் Title Card முதல் சிங்கப்பூர் கௌரவம் வரை: தேனிசை தென்றல் தேவா 'Not an Easy Job'!

Spread the love

வொயிட் அன்ட் வொயிட் ஜிப்பா – பேண்ட் இவருடைய நிரந்தர உடை. கானா, குத்து, மெல்லிசை எனத் திரையிசையில் ஆல்-ரவுண்டர் இவர். கரகரக் கட்டைக் குரல் இவருடைய ப்ளஸ். எப்போதுமே மெல்லிய புன்னகையை இவரது முகத்தில் காணலாம்…

இப்படிப் பல ‘இவர்’களைக் கொண்டிருப்பவர்தான் தேனிசைத் தென்றல் தேவா.

இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.

> தேவாவின் ‘பீக்’ காலக்கட்டம் 90-கள் மற்றும் ஏர்லி 2கே. ஆனால், அந்தக் காலக்கட்டம் அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

இசைஞானி இளையராஜா என்கிற பேராழி எல்லா பக்கத்திலும் ஆக்கிரமித்திருக்க, இசைப்புயலாக ஏ.ஆர்.ரஹ்மான் என்ட்ரி கொடுக்க, கொஞ்சம் கூடத் தட்டுத் தடுமாறாமல் தன்னுடைய கப்பலைத் தனக்கே உரிய பாதையில் வெற்றிகரமாக செலுத்தியவர் இவர்.

தேவா
தேவா

> ஆங்கிலத்தில், ‘is not an easy job’ என்று கூறுவார்கள். அதாவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதுதான் அதன் அர்த்தம். அப்படிப் பார்த்தால், தேவா-ஆக இருப்பது ‘not an easy job’.

காரணம், இன்றும் தேவாவின் பல சூப்பர் ஹிட் பாடல்களை இளையராஜாவின் பாடல்கள் என்று கடந்துகொண்டிருக்கிறோம்.

பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, ஆசை, நேருக்கு நேர் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் சூப்பர் உதாரணங்கள்.

> ‘திறமைக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும்’ என்பதற்கு தேவாவிற்கு சிங்கப்பூரில் கிடைத்த ஒரு கௌரவம் சிறந்த உதாரணம்.

1997-ம் ஆண்டு வெளியானது ‘பொற்காலம்’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தில், ‘தஞ்சாவூரு மண்ணை எடுத்து…’ என்கிற பாடல் தேவாவின் இசையில் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடல் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் எஸ்.ஆர்.நாதனின் ஃபேவரைட். அவரது இறுதி அஞ்சலியில் இந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. இது தனக்குக் கிடைத்த ஒரு கௌரவம் என்று நேர்காணல் ஒன்றில் தேவாவே சொல்லியிருக்கிறார்.

தேவா
தேவா

> 1992-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பிடிக்கத் தொடங்கியது அவரது ஐக்கானிக் ‘டைட்டில் கார்டு’. இப்போது ஜெயிலர் 2 வரையிலும், இனியும் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் இதுவே டைட்டில் கார்டு.

இந்த டைட்டில் கார்டின் இசையமைப்பாளரே தேவாதான்.

> ரஜினிகாந்த் vs கமல்ஹாசன், அஜித் vs விஜய் உச்ச காலக்கட்டம் இவருடைய காலம். ஆனால், இவர் இந்த நான்கு பேரின் திரைப்படங்களிலும் இசையமைத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *