சோலி முடிஞ்ச்.. சிஎஸ்கே பயிற்சியாளராகிறார் ஹேமங் பதானி? காசி விஸ்வநாதனுடன் காட்டிய நெருக்கம்! | CSK: Hemang Badani to be appointed as the Head Coach of CSK team after participated in the India Cements function

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளமிங் நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. அதற்கேற்ப இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக நடத்தப்படும் கிரிக்கெட் தொடரின் அறிமுக விழாவில் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதனுடன் ஹேமங் பதானி பங்கேற்றுள்ளார்.

அண்மையில் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளமிங் நீக்கப்பட்டார். 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீபன் பிளமிங், கடந்த 3 ஆண்டுகளாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தார். அவரின் பயிற்சி முறைகள் சிஎஸ்கே அணிக்கு கொஞ்சம் ஏற்புடையதாக இருக்கவில்லை.

CSK

ஆர்சிபி, கேகேஆர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் பயிற்சி முறைகளில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. இதனால் காலத்திற்கு ஏற்ப சிஎஸ்கே அணியும் மாற்றம் அடைய வேண்டிய தேவைகள் எழுந்துள்ளன. இதனால் பிளமிங்கை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு புதியவரை நியமிக்க சிஎஸ்கே நிர்வாகம் தயாராகிவிட்டது.

இதனால் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக ஆடம் வோஜஸ், சங்கக்காரா, பிரண்டன் மெக்கல்லம், ரவி சாஸ்திரி உள்ளிட்டோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. இதில் ஆடம் வோஜஸ் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளை பயிற்சியாளராக செய்தவர். இதனிடையே ஹேமங் பதானியும் பெயரும் சிஎஸ்கே பரிந்துரை பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகியது.

இது சிஎஸ்கே ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது. ஏனென்றால் டெல்லி அணியுடன் 2 ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக பயணித்த ஹேமங் பதானி, பிளே ஆஃப் சுற்றுக்கு கூட அந்த அணியை அழைத்து செல்லவில்லை. இதனால் ஹேமங் பதானிக்கு எதிராக சிஎஸ்கே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொந்தளிக்க தொடங்கினர். ஆனால் வழக்கம் போல் சிஎஸ்கே நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

ஏனென்றால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக நடத்தப்படும் கிரிக்கெட் தொடருக்கான அறிமுக விழாவில் ஹேமங் பதானி பங்கேற்றுள்ளார். அவருடன் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனும் இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி கொண்டு வரப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *