அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், “தன் கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை” என டி.டி.வி.தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்தார். அடுத்த சில மணி நேரங்களில் தினகரனுடன் ஆளுநர் மாளிகை வந்த காமராஜ், “நான் தவெக-வுக்கு ஆதரவு தரவில்லை, அது போலி கடிதம்” என மறுப்பு தெரிவித்தார். த.வெ.க ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைப்பட்டபோது, அமைச்சர் பதவி நிபந்தனையுடன் காமராஜ் ஆதரவு கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுக் கொண்ட கையோடு, இன்று சட்டமன்றத்தில் த.வெ.க-வுக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் காமராஜ்.

இதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கினார். எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து வராது என்பதை உறுதி செய்துகொண்டே காமராஜ் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில்,“குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் – தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.