வாட்ஸ்அப் திருமண அழைப்பிதழ் மோசடி: 5 லட்சம் இழந்த நபர்! APK வைரஸ் எச்சரிக்கை! WhatsApp Wedding Invitation Scam: Man Loses ₹5 Lakhs! APK Virus Warning!

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த நூர் நஹித் கான் என்ற 42 வயது தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், “எங்கள் திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். முழுமையான விவரங்களுக்குக் கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழை டவுன்லோட் செய்து பார்க்கவும்” என்று அன்பாகக் குறிப்பிடப்பட்டு, கூடவே ஒரு ஃபைல் அனுப்பப்பட்டிருந்தது.

அதை உண்மையான அழைப்பிதழ் என நம்பிய அவர், அந்த ஃபைலை டவுன்லோட் செய்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் (அதிகாலை 4.45 முதல் 4.54 மணிக்குள்), அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பல UPI பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 5,00,440 திருடப்பட்டது.

இந்த மோசடி எப்படி வேலை செய்கிறது?

பொதுவாக திருமண அழைப்பிதழ்கள் புகைப்படமாகவோ (JPEG, PNG) அல்லது ஆவணமாகவோ (PDF) மட்டுமே வரும். ஆனால், அந்தத் தொழிலதிபருக்கு வந்தது .apk (Android Package Kit) என்ற வடிவிலான ஒரு ஃபைல்.

ஆன்ட்ராய்டு மொபைல்களில் ஒரு புதிய செயலியை (App) அதிகாரபூர்வ ப்ளே ஸ்டோருக்கு வெளியே இருந்து இன்ஸ்டால் செய்யப் பயன்படும் ஃபைல்தான் APK. மோசடி நபர்கள் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில், ஒரு ஆபத்தான உளவுச் செயலியை APK ஃபைலாக அனுப்புகிறார்கள். அதை நாம் வெறும் புகைப்படம் அல்லது PDF என நினைத்து கிளிக் செய்வோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *