‘ஜெம்’ வீரமணி: `தாஜ் ஹோட்டலில்தான் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனா.!’- ஜான் பாண்டியன் பேட்டி | EXCLUSIVE | Jhon Pandiyan exclusive interview on Veeramani case

Spread the love

“ஜெம்’ வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து கடந்த 2024-ம் ஆண்டே தமிழக காவல்துறையில் புகார் தெரிவித்ததாகக் கூறி அதிர்ச்சி கிளப்பினார் தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார்.

மேலும், இந்த விவகாரத்தில் ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’த்தின் தலைவர் ஜான் பாண்டியனும் பஞ்சாயத்து செய்ததாக திடுக்கிடும் தகவல்களைக் கூறியிருந்தார்.

இதுகுறித்து ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’ தலைவர் ஜான் பாண்டியனிடம் விளக்கம் கேட்டுப் பேசியபோது….

“இந்த விவகாரத்தில், ‘புதிய தமிழகம் கட்சி’யினர் என் மீது குறிவைத்து அவதூறு பரப்பி வருகிறார்கள். ஏதோ பக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்ததுபோல், யூ ட்யூபிலும் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். ஏதேதோ சொல்லி வசூல் பண்ணுவதற்காக இவர்கள் எல்லாம் இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். எனக்கு எதுவுமே புரியவில்லை.”

“நான் யாரையும் மிரட்டவில்லை. இரண்டரை வருடங்களுக்கு முன்பு, ‘ஒரு குடும்ப பிரச்னை சம்பந்தமாக உங்களிடம் பேசவேண்டும்’ என என் வீட்டிற்கே வந்து ரஞ்சன் குமார் என்னைச் சந்தித்தார். உடனே ‘குடும்ப பிரச்னை என்றால் பொது இடத்தில் வைத்துப் பேசலாம்’ என தாஜ் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அப்போது ‘சாந்திக்கும் ஜெம் வீரமணிக்கும் இடையே நீண்ட நாள் தொடர்பு இருந்தது. ஆனால், இப்போது சாந்தியைத் துரத்தி விட்டுவிட்டார். எனவே அவரிடம் பேசி, 20 கோடி ரூபாய் வாங்கிக் கொடுங்கள்’ என்றனர்.

ரஞ்சன் குமார்

ரஞ்சன் குமார்

இப்படி என்னிடம் வருவதற்கு முன்பே, சாந்தியும் ரஞ்சன் குமாரும் ஜெம் வீரமணியிடமிருந்து 5, 6 கோடி ரூபாயை மிரட்டி வாங்கியிருக்கிறார்கள் என்ற விஷயத்தையும் அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். மேலும் 20 கோடி ரூபாயை மிரட்டி வாங்குவதற்காகத்தான் என்னை அணுகியிருந்தனர். உடனே ‘இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் தயவுசெய்து என்னை அணுகாதீர்கள்’ எனக்கூறி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *