ஜே.டி. வான்ஸுக்கு பதிலடி: இஸ்ரேலுக்கு இந்தியாவின் ஆதரவை புகழ்ந்த நெதன்யாகு|’India Gives Us Tremendous Support’: Netanyahu’s Big Statement

Spread the love

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், “இஸ்ரேலுக்கு அமெரிக்காவை தவிர சக்தி வாய்ந்த கூட்டாளி யாரும் இல்லை’ என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, Fox News செய்தி நிறுவனத்தின் பேட்டியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “முதலாவதாக, நான் ஜே.டி. வான்ஸை மதிக்கிறேன்; எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது.

ஆனால், அதற்காக அவர் சொல்லும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தமல்ல.

அதே நேரத்தில், ஒன்றை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் – வெள்ளை மாளிகையில் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும்தான். அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

ஜே.டி.வான்ஸ்

ஜே.டி.வான்ஸ்
JD Vance | Instagram

இரண்டாவதாக, நமக்கு வேறு சில நண்பர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, இந்தியா என்ற ஒரு சிறிய நாடு இருக்கிறது — உங்களுக்குத் தெரியும்.

அங்குக் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் வாழ்கிறார்கள். அங்கு நமக்கு எவ்வளவு பிரமாண்டமான ஆதரவு இருக்கிறது தெரியுமா?

நமக்கு எங்கெல்லாம் ஆதரவு இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏனென்றால், இப்போது பல நாடுகளின் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இஸ்ரேலுக்கு எதிரான, யூதர்களுக்கு எதிரான கருத்துக்கள் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *