‘ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!’- சீமான் | Cancel the Elections Conducted Under Gnanesh Kumar and Hold Fresh Elections says Seeman

Spread the love

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பி வந்தது.

தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

Gyanesh Kumar – தலைமை தேர்தல் ஆணையர்

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது.

வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்?

எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *