டீசலைத் தொடர்ந்து உர ஒப்பந்தமா? அமெரிக்காவுக்கு புதின் அளித்த தகவல்|Putin’s Next US Deal? Russian Fertiliser Exports in Focus

Spread the love

நேற்று அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்யாவில் அந்த நாட்டு அதிபர் புதினைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து புதின் தெரிவித்துள்ளதாவது…

“உக்ரைன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் நீங்கள் செலுத்தும் கவனத்திற்கும், அதிபர் ட்ரம்பின் கவனத்திற்கும் நன்றி.

குறிப்பாக மனிதநேய அடிப்படையில் அதிபர் ட்ரம்ப் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை நான் அறிவேன்.

ஈரான் போர்

ஈரான் போர்
கோப்புப் படம்

எங்களது சமீபத்திய தொலைபேசி உரையாடல் உட்படப் பல்வேறு பேச்சுவார்த்தைகளில், இரு தரப்பிலும் உள்ள ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஆனால், இது ராணுவ வீரர்களின் இழப்புகள் பற்றியது மட்டுமல்ல. பொதுமக்கள் படும் துயரங்களைப் பற்றியதும் கூட.

ஈரான் போரில்…

ஈரானுடனான எங்களுடைய தனித்துவமான நம்பிக்கைக்குரிய உறவு உங்களுக்குத் தெரியும்.

ஈரானுடனான நெருக்கடியைத் தீர்க்க எங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்வோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *