ஃபகத் ஃபாசில், எஸ்.எஸ். ராஜமௌலி சாரின் தயாரிப்பில், கார்த்திகேயாவுடன் இணைந்து இப்படி ஒரு படம் பண்ணுவார் என்று நாம் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். இத்தகைய ஒரு வித்தியாசமான கதைக் களத்தை நாம் பார்த்ததே இல்லை.
நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு கதைக் களம் இது. திரையில் இதைப் பார்ப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நானும் ஃபகத் ஃபாசிலும் காலை, மதியம், மாலை, நள்ளிரவு, விடிய விடிய எனப் பல நேரங்களில் மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம்.
ஒன்றாக நிறைய நேரத்தைச் செலவழித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் சினிமா பயணத்தைத் தொடங்கிய போது நடந்த சம்பவங்கள், எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகள் என மனம்திறந்து நிறையப் பேசிய நினைவுகள் உள்ளன.
நாங்கள் இருவருமே எடுத்தவுடனே இந்த இடத்திற்கு வந்துவிடவில்லை. பல தடைகளையும் காயங்களையும் கடந்த பிறகே நிமிர்ந்து நிற்க முடிந்தது. என்னுடன் இவ்வளவு அழகான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும், மனதைத் திறந்து பேசியதற்கும் நன்றி” எனப் பேசினார்.

சமீபத்தில் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் தங்களின் 20-ஆம் ஆண்டு திருமண நாளை மிகப்பிரமாண்டமாகக் கொண்டாடியிருந்தனர்.
அது குறித்து சூர்யா, “ஜோதிகாவின் 20 ஆண்டுகால பக்கெட் லிஸ்ட் அது. அதனை மீண்டும் எங்களால் ரீகிரியேட் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மிகவும் அழகாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.
எங்கள் திருமணப் பந்தத்திற்கு நீங்கள் அனைவரும் தொடர்ந்து அளப்பரிய அன்பையும் மரியாதையையும் கொடுத்து வருகிறீர்கள். அதனால்தான், அந்தச் சந்தோஷமான தருணங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…