தங்கம் விலை ஏறுமா? இறங்குமா? இன்று வெளியான நிலவரம்! – Kumudam

Spread the love

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 27-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கும், ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (அக்.28) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும், ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று (அக்.29) தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

கடந்த நான்கு நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 5000 குறைந்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2.15 லட்சமாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *