தங்கம் விலை மீண்டும் உயர்வு: $4,100 தாண்டிய சர்வதேச சந்தை – காரணம் என்ன?|Gold Is Rising Again! Here’s Why Prices Are Surging

Spread the love

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 3,000 டாலருக்குக் கீழ் சென்றுகொண்டிருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் 4,100 டாலர்களைத் தாண்டி உள்ளது.

இதனால், தற்போது இந்திய சந்தையிலும் தங்கம் விலை ஏறியுள்ளது.

சென்னையில் கடந்த மூன்று நாள்களில் (ஜூலை 1, 2026 முதல்) தங்கம் விலை கிராமுக்கு ரூ.600-ம், பவுனுக்கு ரூ.4,800-ம் உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ள தங்கம் விலை தான், சென்னையில் தங்கம் விலை உயர்ந்ததற்கு காரணம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்விற்கு காரணம், நேற்று அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாகின. அந்தத் தரவுகளின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட, குறைவாகவே இருந்தது.

அடுத்ததாக, ஈரான் போர் மீதான ஃபோக்கஸ் முடிந்து, தற்போது பணவீக்கம், உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் வட்டி விகிதம் மாற்றம் போன்றவற்றிற்கு ஃபோக்கஸ் மாறி இருக்கிறது.

இதனால், தங்கம் விலை சற்று ஏறி வருகிறது. அதே மாதிரி, இப்போது வெள்ளி விலையும் உயர்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *