தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்; நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!| Navodaya schools in Tamil Nadu: Supreme Court directs the TN to state its stand

Spread the love

இந்தியை யாரும் எதிர்க்கவில்லை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர் மகாதேவன், “தமிழகத்தை பொறுத்தவரை இந்தியை யாரும் எதிர்க்கவில்லை. இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறார்கள். அதை மனதில் வைத்துக் கொண்டு வாதங்களை வையுங்கள்” என கூறினார்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் என்பது நடைபெற்று வருகிறது. எனவே வழக்கை பனிரெண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், `இரண்டு வாரங்கள் மட்டும் தான் கால அவகாசம் வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்

“இரண்டு வாரம் என்பது மிகவும் குறுகிய காலம் எனவே கூடுதல் கால அவகாசம் வேண்டும்” என்று அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

அப்போது பேசிய நீதிபதிகள், “மூன்றாவது மொழி என்பது தற்பொழுது பிரச்சனைக்குரியதாகவே இருக்கிறது. சிபிஎஸ்சி பள்ளிகளில் கூட ஒன்பதாம் வகுப்பில் மூன்றாவது மொழி என்பது கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அது நிச்சயம் ஏற்புடையது அல்ல. பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு அது கூடுதல் சுமையாக இருக்கும். மூன்றாவது மொழி என்பது தேவைதான். ஆனால் அதை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கூட மாணவர்கள் கற்கலாம்” என நீதிபதி நாகரத்னா கருத்து கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *