“தமிழ்நாட்டில் மதச் சுதந்திரம் இல்லை என வட இந்தியாவில் பரப்பப்படுகிறது” – கார்த்தி சிதம்பரம்| “It is being propagated in North India that there is no religious freedom in Tamil Nadu” – Karti Chidambaram

Spread the love

கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது.

ஆனால், அந்த உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மாலை தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அமல்படுத்தவில்லை, எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி. பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (நவ. 27) விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இன்று (நவ. 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *