தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான ஒளிப்பதிவாலும், அழுத்தமான படைப்புகளாலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று (ஜூலை 10) இயற்கை எய்தினார்.
அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா வட்டாரங்களிலும், சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செழியன், காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்தார்.
சிறு வயது முதலே ஓவியம் மற்றும் புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார்.
“தம்பி’ திரைப்படத்தில் கூடுதல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இவருக்கு, 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கல்லூரி’ திரைப்படத்தில் ஒரு முழுமையான ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.