தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை. அந்தக் கட்சிக்கு 108 இடங்களை மட்டுமே வழங்கியிருந்தனர் தமிழ்நாடு மக்கள்.
ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களோ 118. இதனால், தவெக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உதவியை நாடியது.
அந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைக்க ஆட்சியை அமைத்தது தவெக.
அவர்கள் முன்பே கூறியிருந்தது போல, கூட்டணி ஆட்சியையும் அமைத்தது அந்தக் கட்சி. தமிழ்நாடு கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சியைக் கண்டுள்ளது.
கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்துள்ளன. இந்தக் கட்சிகள் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியிலும் இடம்பெற்றிருக்கின்றன.
ஆனால், தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சியிலும் பங்கேற்கவில்லை… கூட்டணியிலும் முழுமையாகப் பங்கேற்கவில்லை.