Cricket
oi-Yogeshwaran Moorthi
திருப்பதி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா திடீரென ஆன்மிகம் பக்கம் நாட்டம் கொண்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலி மஹிகா சர்மாவுடன் திருப்பதி வந்த ஹர்திக் பாண்டியா, அங்கு மொட்டையடித்து காணிப்பை செலுத்தி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் இந்த மாற்றம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இந்தியாவில் இவருக்கு நிகரான வேகப்பந்துவீச்சு அல்ரவுண்டர் தற்போது யாருமே இல்லை. இதனால் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகிய மூன்றுமே அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியம். தற்போது ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரில் தங்கி என்சிஏ முறையான சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இருந்து விலகும் முடிவை ஹர்திக் பாண்டியா எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மும்பை அணி நிர்வாகமும் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய ஆலோசித்து வருகிறது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் இருக்கின்றன. மும்பை அணி இந்த முடிவினை எடுக்க ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் மட்டுமல்லாமல் அவரின் ஒழுக்கமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு சீசனின் போது ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு காதலியுடன் வலம் வந்திருக்கிறார்.
2024 சீசனில் நடாஷா உடன் இருந்த ஹர்திக் பாண்டியா, 2025 சீசனில் ஜாஸ்மின் வாலியாவுடன் இருந்தார். கடந்த சீசனில் மஹிகா சர்மாவுடன் இருந்தார். அதேபோல் களத்திலும் மற்றும் களத்திற்கு வெளியிலும் மும்பை வீரர்கள் எப்போதும் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா அதனையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்.
இதனால் மும்பை அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா திடீரென ஆன்மிகம் பக்கம் திரும்பி இருக்கிறார். காதலி மஹிகா சர்மாவுடன் இணைந்து திருப்பதி கோயிலுக்கு வந்த ஹர்திக் பாண்டியா, அங்கு மொட்டையடித்து காணிக்கை செலுத்தி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.

