International
oi-Nantha Kumar R
அங்காரா: திரும்பும் திசையெங்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பள்ளத்தாக்குகள். ஊருக்கு நடுவே சுத்தமாக ஓடும் நீரோடை என்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் துருக்கியின் முக்கிய மகாணம் தான் ‘ரைஸ்’. இந்நிலையில் தான் ஊருக்கு நடுவே ஓடும் கால்வாயில் திடீரென்று தண்ணரீன் நிறம் ரத்த சிவப்பாக மாறிய சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
துருக்கியில் அதிக மழை பெய்யும் மாகாணம் என்றால் அது ‘ரைஸ்’ மாகாணம் தான். தேயிலை தோட்டத்துக்கு பெயர் பெற்ற இந்த மாகாணத்தில் கருப்பு தேநீர் (ரைஸ் சாய்) விற்பனை, கிவிப்பழம் விற்பனை, மீன்பிடி தொழில் உள்ளிட்டவை ரொம்ப ‘பேமஸ்’.

போன்டிக் மலைகளுக்கும் கருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த பிரதேசம் பள்ளத்தாக்குகள், புல்வெளிகள் என இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும். ஆண்டு முழுவதும் இங்கு மழை பெய்து கொண்டே இருககும். இந்த ‘ரைஸ்’ மகாணத்தில் தேகிர்மெந்தேரே கால்வாய் ஓடுகிறது.
இந்த கால்வாயில் தான் திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய இந்த வீடியோக்களை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னணி என்ன? என வினாக்களை எழுப்பினர்.
தற்போது துருக்கியின் சுற்றுச்சூழல் துறையின் அதிகாரிகள் மர்மமூடிச்சுகளை அவிழ்த்துள்ளனர். கால்வாயில் ரத்த சிவப்பு நிற தண்ணீர் சீறிப்பாய்ந்ததன் பின்னணி பற்றிய விவரம் வருமாறு:
இப்படி ரத்த சிவப்பு நிறத்தில் தண்ணீர் ஓடிய கால்வாய் துருக்கி நாட்டின் ரைஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் தான் சிவப்பு நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. கடந்த நவம்பர் 21ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இதனை பார்த்த பலரும் செல்போன்களில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து கால்வாயில் ஓடும் தண்ணீரின் நிறம் திடீரென மாறியது எப்படி? பின்னணி என்ன? என்பது தொடர்பாக சுற்றுச்சூல் துறையினர் தவிசாரணை மேற்கொண்டு ஆய்வு பணியை தொடங்கினர். ஆய்விற்காக அதிகாரிகள் ட்ரோன்களை பயன்படுத்தினர். கால்வாய் மிகவும் நீளமானது. இதனால் எந்த இடத்தில் தண்ணீரில் நிறம் மாறுகிறது என்பதை ஆய்வு செய்தனர்.
அப்போது தனியார் டீ தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திரிக்கப்படாமல் அப்படியே கால்வாயில் கலப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு 8 லட்சத்து 39 ஆயிரத்து 122 துருக்கி லிராவை (துருக்கி நாட்டின் பணம்) அபராதமாக விதித்தனர். இந்திய மதிப்பில் இது ரூ.15 லட்சத்து 41 ஆயிரத்து 420 ரூபாயாகும்.
அதுமட்டுமின்றி அந்த தொழிற்சாலையில் இருந்து கழிவுநீரை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்த பரசோதனைகளுக்கு பிறகு விதிமீறல்கள் இன்னும் செய்யப்பட்டு இருந்தால் அதற்காக கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.