திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி: தவெக எம்எல்ஏ-கள் ராஜினாமா செய்ய முடிவா? கசியும் தகவல்கள் | DMK – AIADMK coalition government: Can vijay’s Tvk MLAs resign?

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது.

108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தங்களை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், விஜய்யின் ஆட்சியமைக்கும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

“ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான ஆதரவு கடிதங்கள் இல்லை” என ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்

திமுக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு “அவசரகால முடிவுகளை” எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்கவும், “சமூக விரோத சக்திகள்’ உள்ளே வருவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், அவருக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவும் ஒரு திட்டம் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *