மேலும், “தமிழகத்தில் தற்போது 4, 47,603 டிரான்ஸ்பாமர்கள் உள்ளன. 1,910 துணை மின் நிலையங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 122 மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.
தற்போது 468 துணை மின் நிலையங்களை உருவாக்க இருக்கிறோம். 9 ஆயிரம் கோடியில் 238 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
உப்பூர் மின் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. ஆட்சிகள் மாறி மாறி வந்ததால் பாதியில் உள்ள திட்டங்களை முடிக்க ரூ. 8 கோடி தேவை.
நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். 9 டெண்டர்களில் முறைக்கேடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்தப்படும்.

புதிய மின்கட்டமைப்பை மேம்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படும். 215 கோடியை மிச்சப்படுத்தும் திட்டம் அறிமுகம்.
தற்காலிக பணியாளர் எண்ணிகையை கணக்கெடுக்கிறோம். மின்துறை செயல்பாடுகள் இனி வெளிப்படையாக இருக்கும். ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் வேலை பெற கடன் கொடுத்தோர் புகார் அளிக்கலாம். இனி கட்சி நிதி இல்லாமல் பணிநியமினம் செய்யப்படும்.
கொள்முதல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கின்றனர். அதனால் வளர்ச்சி இல்லைமின் கட்டண உயர்வால் திமுக ஆட்சியில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு முன் கட்டணம் உயர்வு இல்லை. இந்தத்துறையை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறோம். ஒரு சில மாதங்களில், ஆண்டுகளில் துறையை நிச்சயம் மேம்படுத்திவிடுவோம்.
தலைவர் விஜய் ஆட்சிக்கு வரவில்லை என்றால் இந்தத்துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும். பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும். இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை.
மின்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் விஞ்ஞான முறையில் ஊழல் நடந்திருக்கிறது” என்று மின்சாரத்துறை அமைச்சர் விளக்கி இருக்கிறார்.