திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?! |Is Raghava Lawrence contesting the Trichy East by-election?!

Spread the love

அந்தப் பதிவில் அவர், “நான் திருச்சி கிழக்குத் தொகுதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகப் பல்வேறு ஊடகத் தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

என்னுடைய ஊடக நண்பர்கள் பலரும் இது குறித்து விளக்கம் கேட்பதற்காக என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்திக்கக் கோரியும் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

இந்த தகவல்களுக்கு நான் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையை எட்டியுள்ளதால், இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் தற்போது “பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன்.

என்னுடைய இந்த ஷெட்யூல் வரும் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. என் தாயாரின் ஆசிர்வாதத்துடன், என்னுடைய வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான முடிவு வரும் 11-ம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *