தேவஸ்தானத்திற்கு விளக்கேற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு அமைத்து அதன் நபர்களின் பெயர்களைத் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கும் மின்னஞ்சல் நினைவூட்டல் உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் செய்யப்பட்டன.
ஆனால், குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவானது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்தது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கார்த்திகை திருநாள் அன்றும் வழக்கமாகத் தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டுத் திருக் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
தேவஸ்தானம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்துப் பரிந்துரைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபத் தூணில் தீபம் ஏற்றவில்லை; அதே வேளையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எடுத்ததாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோயில் அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் விளக்கு ஏற்ற முடிவு எடுத்தது, ஆனால் தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.
தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்தது.” என மாவட்ட ஆட்சியர் தமது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.