பொய்த்துப் போன பருவமழை; வறண்டு போன 1,420 குளங்கள்; வறட்சி பாதிப்பில் நெல்லை, தென்காசி விவசாயிகள் | 1,420 ponds in Tirunelveli and Tenkasi districts have dried up due to failure of monsoon rains

Spread the love

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசினோம், “நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு, நம்பியாறு, பச்சையாறு என 11 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் 13 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 41 முதல் 52 சதவீதம் தண்ணீர் இருப்பு இருந்தது. 727 குளங்கள் நிரம்பி மறுகால் சென்றன. இரு மாவட்டங்களிலும் மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. இதில் 1,221 கால் வரத்துக் குளங்களும், 1,297 குளங்கள் மானாவாரி குளங்களும் ஆகும். இதில், 1,420 குளங்கள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன. தாமிரபரணி மற்றும் சிற்றாற்றுப் பாசனங்களில் உள்ள 958 கால் வரத்துக் குளங்களில் ஒரு மாத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

நீர்மட்டம் குறைந்த பாபநாசம் அணை

நீர்மட்டம் குறைந்த பாபநாசம் அணை

156 குளங்களில் இரண்டு மாத அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் வைப்பாற்றுப் பாசனத்தில் 29 குளங்களும், கீழ் தாமிரபரணி பாசனத்தில் 107 குளங்களும், 408 ஊராட்சிக் குளங்களும் உள்ளன. இதில், 25 முதல் 75 சதவீதம் வரை பெரும்பாலான குளங்களில் தண்ணீர் இருப்பு உள்ளது. 16 குளங்கள் மட்டும் முழுமையாக வறண்டுள்ளது. விரைவில்  வடகிழக்குப் பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *