திருமண பதிவுக்காக அலைமோதிய கூட்டம் கோழிக்கோடு சிவன் கோயிலில் பெறப்பட்ட 12,000 விண்ணப்பங்கள்! | Men flock to a matrimonial information center; 12,000 applications received at the Shiva temple in Kozhikode!

Spread the love

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குந்தமங்கலம் அடுத்துள்ள காரந்தூர் “ஹர ஹர மகாதேவ’ திருக்கோயில் கமிட்டி சார்பில், சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச திருமண தகவல் மையப் பதிவு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 1-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட முகாமில் சுமார் 10,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பதிவு முகாமிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

நேற்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டன. முதற்கட்ட முகாமில் கூட்ட நெரிசல் காரணமாக விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களும், புதிய விண்ணப்பதாரர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கோழிக்கோடு மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவின் பிற மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். இளைஞர்கள் மட்டுமின்றி, தங்கள் பிள்ளைகளுக்காக பெற்றோர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டு முகாம்களையும் சேர்த்து இதுவரை மொத்த 12,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மணமகன் தேவை என விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை 400-க்கும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, நேற்று பெறப்பட்ட 2,000 விண்ணப்பங்களில் பெரும்பாலானவை 30 வயதைக் கடந்த ஆண்களுடையதாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *