திருவண்ணாமலை தீப தரிசனம்; முதன்முறையாக இலவசம்; முன்பதிவு செய்வது எப்படித் தெரியுமா? | deepa darshanam at tiruvannamalai – free for the first time—do you know how to book?

Spread the love

நுழைவுச் சீட்டுகளைப் பெறவிரும்பும் பக்தர்கள், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, திருக்கோயிலின் அதிகார இணையதளமான https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் நாளை 20-ம் தேதி மாலை 3 மணிவரை முற்றிலும் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், 20-ம் தேதி மாலை 4 மணியளவில், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களில் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் ( Random Selection ) முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு, மின்னணு நுழைவுச் சீட்டினை ( e-Ticket ) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புடன்கூடிய குறுஞ்செய்தி, அவர்கள் முன்பதிவின்போது அளித்த கைப்பேசி எண்ணிற்கும், தகவல் மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படும்.

தீப தரிசனம்

தீப தரிசனம்

தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்களுக்கான மின்னணு நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து, 24-ம் தேதி திருக்கோயிலில் அதைக் காண்பித்தால், ஸ்கேன் செய்த பின்னர் திருக்கார்த்திகை தீப தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக, ஆதார் அட்டையை அடையாளச் சான்றாகக் கொண்டு சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

பரணி தீபத்திற்கு பதிவு செய்பவரால், மகா தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது. மகா தீபத்திற்கு பதிவு செய்பவரால் பரணி தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது.

பரணி தீபத்திற்கான முன்பதிவு செய்பவர்கள் ஒரு சீட்டு மட்டுமே பதிவு செய்ய இயலும், மகா தீபத்திற்கு பதிவு செய்பவர்கள் வெவ்வேறு ஆதார் எண்ணைக்கொண்டு இரண்டு பதிவுகள் மேற்கொள்ளலாம். மேற்படி, நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் மட்டுமே வழங்கப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *