திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; ஆய்வகப் பொறுப்பாளர் போக்சோவில் கைது

Spread the love

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆய்வகப் பொறுப்பாளராக காட்பாடி கீழ்வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (50) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் ஜூலை 24-ம் தேதி, ஆய்வகத்துக்குச் சென்ற முதலாமாண்டு பயிலும் 17 வயது மாணவியின் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து அந்த மாணவியிடம் பாலியில் சீண்டலிலும் ஈடுபட்டுவந்ததாகவும் தெரிகிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திடமும், தனது பெற்றோரிடமும் தெரியப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பிலிருந்தே காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், `போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆய்வகப் பொறுப்பாளர் ராஜசேகரனை நேற்றைய தினம் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *