திருடு போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்; CCTV-யால் சிக்கிய எலி; இன்ஸ்டாவைக் கலக்கிய திருட்டு! | Jewelry worth ₹10 lakh vanishes overnight: Rat turns thief and carries off gold ornament in its mouth

Spread the love

கர்நாடகா மாநிலம் துமகுரு என்ற இடத்தில் நகைக்கடை வைத்திருப்பவர் விஷ்வாஸ். இவர் முதல் நாள் இரவு கடையை அடைத்து மறுநாள் வந்து கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனித்தபோது கடையிலிருந்த வைரக்கல் பதித்த தங்க ஆபரணம் ஒன்றைக் காணவில்லை என்று தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்வாஸ் தனது கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் யாரும் அந்த ஆபரணத்தை எடுத்ததற்கான எந்த வித அடையாளமும் தெரியவில்லை.

கடைக்குள் திருடனும் வரவில்லை. அப்படி இருக்கும்போது ஆபரணம் எப்படி மாயமானது என்ற சந்தேகம் ஏற்பட்டது. காணாமல் போன தங்க ஆபரணம் மொத்தம் 70 கிராம் ஆகும். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

முந்தைய நாள் வேலை நேரத்தில் சிசிடிவி காட்சிகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். ஆனால் அசாதாரணமான எதுவும் இல்லை. காணாமல் போன ஆபரணத்துடன் இணைக்கப்பட்ட காகிதத்தையும் காணவில்லை என்பதை அவர்கள் கவனித்தனர்.

தங்கம் பதுக்கப்பட்ட இடம்

தங்கம் பதுக்கப்பட்ட இடம்

எனவே இரவு முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைச் சோதனை செய்தனர். பழுப்பு நிற எலி ஒன்று அதிகாலை 4.30 மணி முதல் 5 மணிக்குள் நகைகளை ஒவ்வொன்றாக இழுத்துக்கொண்டு அந்த இடத்தைச் சுற்றிக் கொண்டிருந்தது.

அந்த எலி எங்கு செல்கிறது என்று கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது கடைக்குள் இருந்த எலியின் பொந்திற்குள் அதனை எடுத்துசென்றது. அங்கு ஊழியர்கள் பார்த்தபோது காணாமல் போன நகைகள் அனைத்தும் இருந்தது. அவற்றை மீட்டனர்.

ஷோரூம் உரிமையாளர் விஷ்வாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். தங்க ஆபரணத்தைத் திருடிச்சென்ற எலியைக் காணவில்லை. கடை ஊழியர்கள் அந்த எலி எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து விஷ்வாஸ் கூறுகையில், “‘நான் தினமும் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு எஞ்சியதை கடையில் இருந்த குப்பை தொட்டியில் போடுவேன். கடந்த சில நாட்களாகச் சாப்பாடு ஆர்டர் செய்யவில்லை. எனவே எலி குப்பை தொட்டியைப் பார்த்துவிட்டு இந்த நகையை இழுத்துச்சென்றிருக்கவேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *