தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “வாழ்க்கையில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஊழல் என்பது பழைமையான விஷயம்தான். ஆனால், மக்கள் அதற்குப் பழகிப்போய்விட்டார்கள் என்று நினைத்து, நம்மால் அதைக் கடந்து சென்றுவிட முடியாது. அது ஒரு நாள்பட்ட நோய் போன்றது. அதைக் குறைந்தபட்சம் கட்டுப்படுத்தலாம்.

அப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகளால்தான், இங்கே சிலருடைய அடித்தளமே ஆடிப்போய்க் கிடக்கிறது. இப்போது சமீபத்தில் கல்வியிலேயே ஊழல் நடந்திருக்கிறது என்றால், அதை எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? கல்வித் துறைதானே எல்லாவற்றுக்கும் ஓர் அடித்தளம்? பள்ளிப் பாதுகாப்பில் வந்த ஊழலால்தான் கும்பகோணம் பள்ளி விபத்து நடந்தது. இப்போது நினைத்தால்கூட மனம் பதறுகிறது. `என் மேசையில் மூன்று ஃபைல்கள் இருக்கின்றன” என்றுதான் சொன்னேன். உடனே எதிர்க்கட்சியிலிருந்து, `அதைத் திறங்களேன்… திறந்துதான் பாருங்களேன்!’-ன்னு சொன்னாங்க. `சரி’னு திறந்தோம். அதைதான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.