“ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா.!?” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு| vck leader thirumavalavan about 2 seats

Spread the love

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார்.

” “இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டமானு கேக்குறாங்க’ அவர்களிடம் இரண்டு தொகுதிகள் இல்லாததால் தான் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.

ஆட்சி அமைக்க அந்த இரண்டு இடங்களும் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

விசிக தலைவர் திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன்

ஆனால், நம்மை எப்படியாவது விமர்சிக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் சிலர் தொடர்ந்து செயல்படுகிறார்கள். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று அமைச்சர் பதவி பெற்றுவிட்டார்கள். அதனை நாங்கள் பெரிய விஷயமாகவோ, சாதனையாகவோ நினைக்கவில்லை.

சாதி அடிப்படையிலான வன்கொடுமைகளும் ஒரே நாளில் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆட்சி மாறினாலும் இதுபோன்ற சமூகப் பிரச்னைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *