தூத்துக்குடியில் வீசிய பலத்த சுழல் காற்று; எதனால் ஏற்பட்டது? நிலத்தியல்துறை பேராசிரியர் கூறுவது என்ன? | Strong whirlwind hits Thoothukudi; what caused it? Here is what a geology professor says-

Spread the love

அதே சமயம் மேல்மட்டங்களிலிருந்த குளிர்ந்த காற்று உடன் மோதியதால் வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மை அதிகரித்து, காற்றின் திசை மற்றும் வேக வேறுபாடு மூலம் சுழற்சி உருவாகியுள்ளது.

இந்தச் சுழலும் காற்று மேலே எழும் காற்று ஓட்டம் மூலம் செங்குத்தாக நீண்டு, மேகத்திலிருந்து கீழே புனல் வடிவ மேகமாக உருவாகி, தரையைத் தொட்டபோது அது ஒரு குறுகிய காலச் சுழல் காற்றாக மாறியது.

சில தகவல்களின்படி, இது மிக நீளமான அல்லது வலுவான சுழல் காற்று அல்ல; மெல்லிய, குறுகிய மற்றும் பலவீனமான சுழல் மட்டுமே காணப்பட்டது, அதனால், பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.

சரிந்து விழுந்த போர்டுகள்

சரிந்து விழுந்த போர்டுகள்

இந்த நிகழ்வில் முக்கியமானது என்னவென்றால், இந்தியாவில் சுழல் காற்று அரிதானதுடன், தென் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அபூர்வமாகவே நிகழும். பொதுவாக இத்தகைய சுழல்காற்றுகள் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் மட்டுமே அதிகமாகப் பதிவாகின்றன.

இன்றைய தூத்துக்குடி நிகழ்வு, கடலோர ஈரப்பதம், அதிக வெப்பநிலை மற்றும் பலத்த இடியுடன் கூடிய மேக அமைப்பு சேர்ந்து வந்தால், தமிழ்நாட்டிலும் அரிதாக சுழல்காற்று போன்ற நிகழ்வுகள் உருவாகலாம் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கிறது” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *