முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை, ”தமிழகத்தில் அரசு தீவிரமாக பணியாற்ற வேண்டும். சென்னையில் கடந்த ஆட்சியில் விலையில்லா பேருந்தை தந்ததால் பெண்கள் பலன் அடைந்தார்கள். ஆனால் அந்தந்த துறையை மேம்படுத்துவதில் தோல்வி அடைந்து உள்ளார்கள். சென்னையில் 61 சதவீத பொது போக்குவரத்துக்கு வழி இருக்கிறது. மற்ற பகுதிகளில் இல்லை. தமிழக அரசு இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். 500 மினி பஸ்களை போட்டால் தான் மீதமுள்ள இடங்களை போட்டால் தான் நிரப்ப முடியும் என கணக்கெடுப்பு சொல்கிறது. சென்னையில் 61 சதவீத போக்குவரத்து உள்ளது என்பது கவலையளிக்கிறது. அமைச்சர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் வேறு ஏதேதோ விஷயங்களில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஆட்சியில் கவனம் செலுத்தாமல் ஆட்டம் போடுவதில் கவனம் செலுக்கிறார்களா என்று தெரியவில்லை” என்று கூறினார்.
மேலும், “உயர் கல்வி துறை அமைச்சர் வெளிநாட்டு மொழிகளை கற்று கொள்ளுங்கள் ஆனால் 3 மொழி கற்று கொள்ள சொல்லவில்லை. வெளிநாட்டு மொழியை ஆதரிக்கிறார்கள். ஆனால் உள்நாட்டு மொழியை ஆதரிக்க மாட்டார்களாம். கொள்கையில் தெளிவின்மை தெரிகிறது. எப்படியாவது மத்திய அரசை எதிர்க்க வேண்டும். குழந்தைகள் 3 மொழி கற்று கொள்கிறேன் என்றாலும் இந்தியை கற்காதீர்கள் வெளிநாட்டு மொழியை கற்று கொள்ளுங்கள் என்பது. ஆட்சி மீது அக்கறை செலுத்தாமல் ஆட்டம் போடுகிறார்கள். பாட்டு பாடுகிறார்கள். ஆட்டம் போடுவதை விட்டு ஆட்சியை பாருங்கள் என்று அமைச்சர்களிடம் சொல்லும் சூழ்நிலை வந்து இருக்கிறது.
தனியார் தேர்வு நிறுவனங்கள் எல்லாம் நீட்டினால் அதிக கொள்ளையடிக்கிறார்கள். இத்ற்கு பிரதமர் மோடி பொறுப்பு ஏற்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறுகிறார். தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அமைச்சர் பொறுப்பு இல்லையாம். குளறுபடி ஏறபட்டால் பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சொல்லுவது எப்படி?
நீட் பயிற்சி மையத்தை முறைப்படுத்துங்கள். நீட் முலம் பணம் சம்பாதிக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான நீட் பயிற்சி எடுக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்கள் மீது அக்கறை செலுத்தாமல் குறை சொல்வதை விட்டு ஆட்டம் பாட்டத்தை விட்டு விட்டு ஆட்சியை பார்க்க வேண்டும்” என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.



