தென்காசி: சாலையில் கிடந்த 30 சவரன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்குக் குவியும் பாராட்டு | Elderly Man Hands Over 30 Sovereigns of Gold Found on Road to Police

Spread the love

ஏழை விவசாயியான பாப்பையா என்பவர், சாலையில் நடந்து சென்றபோது, ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில், நகை மற்றும் பணம் இருந்துள்ளன. அவற்றை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஒப்படைத்தார்.

தென்காசி மாவட்டம் அரியப்பபரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (68) இவர் பாவூர்சத்திரம் அருகே குருசாமிபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டில் இருந்து 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 5000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அரியப்புரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவரது கையில் இருந்த பை ஒன்று தவறி விழுந்தது. அதை அறியாமல் வீட்டுக்குச் சென்ற அவர் பொருட்களைச் சோதனை இட்டபோது 30 சவரன் நகை மற்றும் 5000 ரூபாய் ரொக்கப்பணம் வைத்திருந்த பை மட்டும் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. பதறிப்போன அவர் தங்கள் நடந்து வந்த வழியெங்கும் தேடிப் பார்த்தும், பையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

விவசாயி பாப்பையாவை பாராட்டும் டி.ஐ.ஜி

விவசாயி பாப்பையாவை பாராட்டும் டி.ஐ.ஜி

இதனிடையே, குருசாமிபுரத்திற்கு அருகில் உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாப்பையா என்ற 76 வயது முதியவர் ஆரியங்காவூர் வழியாக சைக்கிளில் சென்றபோது சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் அதிகளவு தங்க நகைகள் மற்றும் பணம் இருப்பதை கண்டு அந்தப் பையைப் பத்திரமாக மீட்டுள்ளார். அதில் நகை மற்றும் பணம் இருப்பதைக் கண்ட அவர் உடனடியாக வீட்டுக்குச் சென்று தனது மகனை அழைத்துக் கொண்டு பாவூர்சத்திரம் காவல் நிலையம் சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் வேல்கனியைச் சந்தித்து நடந்த விவரங்களை எடுத்துக் கூறி அந்தப் பையை ஒப்படைத்தார்.

நகை மற்றும் பணம் இருந்த பை காணாமல் போனதால் பதறிப் போன சுப்பிரமணியன் காவல் நிலையத்துக்குச் சென்று போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே முதியவர் பாப்பையா நகை பையை ஒப்படைத்து இருந்ததால் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான காவல்துறையினர் நகைக்கான அடையாளங்களைக் கேட்டு அதை உரியவரான சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *