காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது.
“தொகுதி மறுவரையறையை ஒத்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம்.

2029-லேயே தேர்தல் வந்துவிடும். நீங்கள் 5 வருடம் காத்திருக்க வேண்டாம்’ என்று சொல்லி பாஜக திமுகவிற்கு ஆசைக்காட்டுகிறது.
ஆனால் திமுக அந்தப் பாதையில் சென்றால் இந்தத் தேர்தலில் வந்த முடிவுகளை விட மிக மோசமான முடிவுகள்தான் வரும்.