இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல்கள் குறித்தான கேள்விகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி முன்வைத்தோம்…
“த.வெ.க-வின் முதல் 100 நாள் ஆட்சிக்கு நானே பாஸ் மார்க் கொடுத்திருந்தேன். ஆனால், போகப்போக அவர்களது ஆட்சியில் அடுத்தடுத்த சறுக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கொடுக்கக்கூடிய அளவுக்கு யாரும் இல்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.
அவர்களது கூடா நட்பு கேடாய் வந்துகொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு அந்தக் கூடாநட்பை அவர்கள் விலக்கிக்கொண்டால், கச்சிதமான ஆட்சியைத் தர முடியும்!”
“அதை ‘யு டர்ன்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்… ஆனால், புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள் தங்கள் அனுபவமின்மையால் தவறான அறிவிப்புகளைச் செய்துவிடுகிறார்கள். பின்னர் அந்த அறிவிப்பு தவறு என்று சுட்டிக்காட்டி எதிர்ப்புகள் வரும்போது, ‘இல்லையில்லை சரிதான்’ என்று வாதிடாமல் அறிவிப்பைத் திரும்பப் பெற்று தங்களைச் சரிசெய்துகொள்கிறார்கள்; திருத்திக்கொள்கிறார்கள். எனவே அவர்களது அந்தச் செயல்பாட்டை நான் வரவேற்கிறேன்”
“தமிழக பா.ஜ.க-வின் பிரசாரப் பட்டியல் எப்போது தீர்மானிக்கப்பட்டது என்றுகூட எனக்குத் தெரியாது. நான் பா.ஜ.க-வில் ஒரு கடைநிலைத் தொண்டன். அவ்வளவுதான். கட்சி சார்பில் பிரசாரத்துக்குச் செல்லவேண்டும் அல்லது தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாம் நான் கட்சியில் சேரவில்லை.

கொள்கைக்காகவும், தமிழ் இனத்துக்குத் துரோகம் இழைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க-விடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்கவும்தான் நான் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறேன். பிரசாரத்துக்கு அழைத்திருந்தால் நிச்சயம் போயிருப்பேன்.”
“த.வெ.க கூட்டணியில் இருக்கிற வி.சி.க., தி.மு.க-வின் தோல்வி குறித்து கவலைப்படுவது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாகத்தான் இருக்கிறது. ஆனால், ‘வி.சி.க-வின் துரோகத்தால்தான் நாங்கள் தோற்றுவிட்டோம்’ என தி.மு.க-வினர் சொல்லிவருகிறார்கள்.
‘எஸ்.ஐ.ஆரினால்தான் நாங்கள் தோற்றுவிட்டோம்’ என எந்தக் கட்சி சொன்னாலும், ‘இத்தனை நாட்களாக இறந்தவர்கள், இல்லாதவர்களின் ஓட்டுகளை எல்லாம் போட்டு ஜெயித்துக்கொண்டிருந்தோம். இப்போது அந்த ஃப்யூஸைப் பிடுங்கிவிட்டார்கள்’ என்று சொல்லவருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் ‘எஸ்.ஐ.ஆருக்கும் தோல்விக்கும் சம்பந்தம் இல்லை’ என்கிறார். எனவே முடிவை மக்களே எடுத்துக்கொள்ளட்டும்.”